ஹோர்முஸ் கடலில் மிதக்கும் ஐபோன்கள் – படகுகளில் வந்து அள்ளிச்செல்லும் மக்கள்

ஈரானின் ஹோர்முஸ் நீரிணையில் கண்ணி வெடி வெடித்ததில் சிங்கப்பூர் கொடியுடன் 2,500 கொள்கலன்களுடன் பயணித்த கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இந்த கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் கொள்கலன்களில் இருந்த ஐபோன்கள், விலையுயர்ந்த வாசனை திரவிய பாட்டில்கள் கடலில் மிதக்கின்றன. இதுபற்றி அறிந்தவர்கள் படகில் சென்று ஐபோன்கள், வாசனை திரவியங்களை மொத்தமாக அள்ளி செல்லும் வீடியோ வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையின் கப்பல் வழிப்பாதையை உன்னிப்பாக ஈரானின் ஐஆர்ஜிசி படையினர் கவனித்து வருகின்றனர். அனுமதியின்றி பயணிக்கும் கப்பல்களை இரக்கமே இன்றி ஏவுகணை கொண்டு தாக்கி வருகின்றனர். அதேபோல் அங்குள்ள மாற்று வழிப்பாதையில் ஆங்காங்கே கடல் கண்ணிவெடிகளை வைத்துள்ளனர். இதனால் உலகிலேயே ஆபத்து நிறைந்த இடமாக மாறி உள்ளது ஹோர்முஸ் நீரிணை.

ஆனால் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதில் கடலில் கொள்கலன்கள் மூழ்கி கிடப்பதோடு, கடல் நீரில் வாசனை திரவியங்கள், ஐபோன்கள் உள்ளிட்டவை மிதக்கின்றன. அதனை பொதுமக்கள் சிறிய படகுகளில் சென்று மொத்தமாக அள்ளி செல்கின்றனர். இந்த வீடியோ ஹோர்முஸ் நீரிணையில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

https://x.com/imayanktiwari/status/2110414984023052363?

போர் பதற்றம் நிறைந்த கடல் பகுதியில் எப்படி ஐபோன்கள், வாசனை திரவியங்கள் மிதக்கின்றன? என்று பார்த்தபோதுதான் அதன் பின்னணி குறித்த விவரம் வெளியானது. ஐக்கிய அரபு அமீரகத்தி்ல் இருந்து நேற்று சிங்கப்பூர் நாட்டு கொடியுடன் சென்ற ஜிஎஃப்எஸ் பிரைட் என்ற பெயர் கொண்ட கண்டெய்னர் கப்பல் பயணித்தது. இந்த கப்பல் ஹோர்முஸ் நீரிணையில் ஈரானால் தடை செய்யப்பட்ட கடல்வழி பாதையில் பயணித்தபோது கண்ணிவெடி வெடித்ததில் கப்பல் தீப்பிடித்து கடலில் மூழ்கியது.

கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் கடலில் ஆங்காங்கே மிதப்பதோடு, அதில் இருந்து ஐபோன்கள், வாசனை திரவியங்கள் உட்பட பிற சரக்குகள் கடலில் மிதக்கின்றன. இதுபற்றி அறிந்த மக்கள் சிறிய படகில் சென்று அதனை மொத்தமாக அள்ளிச் செல்கின்றனர் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles