சவூதிக்கான விமான சேவைகள் ஒக்ரோபர் 24 வரை இரத்து!

பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, கொழும்பு – தம்மாம் மற்றும் கொழும்பு – ரியாத் இடையிலான அனைத்து விமானச் சேவைகளும் 2026 ஒக்டோபர் 24ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே முதன்மையான முன்னுரிமை எனக் குறிப்பிட்டுள்ள நிறுவனம், வணிக விமானச் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஏற்ற சூழல் நிலவுகிறதா என்பது மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே சேவைகள் மீளத் தொடங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு, இலங்கைக்குள் 1979 என்ற இலக்கத்திற்கும், சர்வதேச அழைப்புகளுக்கு +94 11 777 1979 என்ற இலக்கத்திற்கும் தொடர்புகொள்ளலாம். WhatsApp வழியாக +94 74 444 1979 என்ற இலக்கத்திற்கு செய்தி அனுப்பலாம். பயணிகள் தமது பயண முகவரை அணுகுவதுடன், www.srilankan.com இணையதளத்தையும் பார்வையிடலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles