சவூதி அரேபியாவில் பங்களாதேஷ் பிரஜைகள் இருவருக்கு மரண தண்டனை

சவூதி அரேபியாவில் பங்களாதேஷ் பிரஜைகள் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் புனித நகரான மக்காவில் உள்ள ஒரு மசூதிக்குள் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டமைக்காக அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், இந்த மரண தண்டனைகள் குறித்து தங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்று சவூதி அரேபியாவில் உள்ள பங்களாதேஷ் தூதரகம் கூறியுள்ளது.

சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த மரண தண்டனைகள் ஒக்ரோபர் 14, புதன்கிழமை அன்று நிறைவேற்றப்பட்டுள்ளன.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் நஸீருல் இஸ்லாம் அப்துல் பஸீர் மற்றும் சித்தி அக்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய சட்டத்தின் கீழ் உள்ள விருப்புரிமைத் தண்டனையான ‘தாஸீர்’ என்ற பிரிவின் கீழ் இந்த மரண தண்டனைகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles