மேற்கு கரையில் இஸ்ரேல் அத்துமீறலுக்கு சீனா கடும் எதிர்ப்பு

மேற்கு கரையில் இஸ்ரேல் மேற்கொள்ளும் கட்டாயக் குடியிருப்புகள் அமைப்பதை நிறுத்த வேண்டும் என்றும், அதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்ஸாக்கிடம் வலியுறுத்தினார் என சீன வெளியுறவு அமைச்சகம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அஜர்பைஜானில் நடைபெற்ற சந்திப்பின் போது ஹெர்ஸாக்கிடம் பேசிய வாங் யி, பலஸ்தீனப் பிரச்சினை என்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வரலாற்று அநீதி என்பதில் சீனா தொடர்ந்து உறுதியான நிலைப்பாடு கொண்டுள்ளது என்று அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியையும் சமரசத்தையும் ஊக்குவிப்பதே சீனாவின் மத்திய கிழக்குக் கொள்கையின் “அடித்தளம்” என்று வாங் யி கூறினார்.

“இரு நாட்டுத் தீர்வு” (two-state solution) மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு சரியான வழி என்றும், மனிதநேய “பேரழிவு” மேலும் பரவாமல் தடுக்க காசா பகுதிக்கு முழுமையான நிவாரண உதவிகள் சென்றடைவதை உடனடியாக உறுதி செய்வதே தற்போதைய முதன்மை முன்னுரிமை என்றும் சீனா நம்புவதாக வாங் யி குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், மேற்கு கரையில் இஸ்ரேல் மேற்கொள்ளும் கட்டாயக் குடியிருப்புகள் அமைப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அனைத்துத் தரப்பினரும் விரைவில் பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வுக்குத் திரும்பி, மோதலுக்கு அரசியல் தீர்வு காண சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்ற சீனா தயார் நிலையில் உள்ளதாக வாங் யி மேலும் தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles