பிரான்ஸில் வன்முறையாக மாறிய மாணவர்கள் போராட்டம் – தொழிற்சங்கத்தினரும் இணைவு

பிரான்ஸில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்பு குறைபாடுகளுக்கு எதிராகவும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் சுமைக்கு எதிராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் தீவிரமடைந்து, நாடு தழுவிய அளவில் வன்முறையாக மாறியுள்ளன.

நாடு முழுவதும் சுமார் 5,500,000 (5.5 இலட்சம்) பேர் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளளனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உயர்நிலைப் பாடசாலை மாணவர்களால் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், தற்போது தொழிற்சங்கத்தினரும் ‘மஞ்சள் அங்கி’ போராட்டக்காரர்களும் கைக்கோர்த்துள்ளனர்.

தலைநகர் பாரிஸ், லியோன் மற்றும் லிமோஜஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடும் மோதல்கள் வெடித்துள்ளன. பொலிஸார் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அடுத்து, கூட்டத்தைக் கலைக்கக் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் பயன்படுத்தப்பட்டன.

இந்த மோதல்களில் இதுவரை 150 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். பல நகரங்களில் கடைகள் சூறையாடப்பட்டு வணிக வளாகங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், கட்டிடங்களுக்கும் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்ட நிலையில், லிமோஜஸ் நகர மண்டபத்தின் கூரை பகுதியளவில் சரிந்து விழுந்துள்ளது.

வன்முறைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக நாடு முழுவதும் இதுவரை குறைந்தது 1,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பிரான்ஸ் அரசியலில் நிலவும் ஆழமான நிச்சயமற்ற தன்மையினூடே இந்த வன்முறைகள் வெடித்துள்ளன.

இச்சம்பவங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன், பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தவர்கள் அனைவரும் அடையாளங்காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், அவர்களுக்குக் கடுமையான தண்டனை உறுதியாக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles