ராஜஸ்தானில் வான் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் ரெம்போ ரவலர் வான் 15 அடி கால்வாயில் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்திலுள்ள டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ்வே சாலையில் நேற்று காலை 6 மணியளவில் ஒரு டெம்போ டிராவலர் வேன் சென்று கொண்டிருந்தது. சிம்லியா போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் இருந்த 15 அடி கால்வாயில் கவிழ்ந்தது.

அதில் பயணம் செய்த மத்திய பிரதேச மாநிலம் பேட்டுல் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 15 பேர் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles