பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் குடியேற்ற கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் நடைபெறும் போராட்டங்களுக்கு, அமெரிக்க அதிபர் ஈரான் மீது தொடுத்துள்ள போரே காரணம் என்றும், அதுவே உலகளவில் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது என்றும் மக்ரோன் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இது தொடர்பில் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ட்ரம்ப் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர், பாரிஸ் நகரம் “மிக விரைவில் ஒரு முஸ்லிம் நகரமாக மாறிவிடும்” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குடியேற்றக் கொள்கையே இந்த அமைதியின்மைக்குக் காரணம் என்று கூறியுள்ள அவர், பிரான்சின் எல்லைகளை மூடிவிடுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே பிரான்ஸில் நடைபெறும் போராட்டங்களுக்கு, அமெரிக்க அதிபர் ஈரான் மீது தொடுத்துள்ள போரே காரணம் என்றும், அதுவே உலகளவில் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது என்றும் மக்ரோன் குற்றம் சாட்டியுள்ளார்.
