நைஜீரியாவில் புதிதாக எபோலா தொற்று பதிவாகி உள்ளது என உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. இந்த சூழலில், நைஜீரியாவில் முதன்முறையாக பண்டிபக்யோ வைரசால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கண்டறியப்பட்டு உள்ளார்.
இதுபற்றி உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், உகண்டாவில் இருந்து நைஜீரியாவுக்கு பயணித்து வந்த பெண்ணுக்கு கடந்த 7 ஆம் திகதி அறிகுறிகள் தென்பட தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுஜாவில் கடந்த 11ஆம் திகதி இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வக முடிவில் நேற்று அவருக்கு தொற்று உறுதியானது. அவருடன் தொடர்புடைய 44 பேர் அடையாளம் காணப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
