யாழ். மேயரிடம் சி.ஐ.டியினர் 2 மணி நேரம் தீவிர விசாரணை

“தியாக தீபம் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று தெரிந்துகொண்டா நல்லூரில் சிலை அமைப்பதற்கு அனுமதி வழங்கினீர்கள்?” என யாழ்ப்பாணம் மாநகர மேயர் திருமதி வி.மதிவதனியிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் காலப்பகுதியில் நல்லூரில் அவரது சிலையை அமைப்பதற்கு அனுமதி வழங்கியமை தொடர்பில், யாழ். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று புதன்கிழமை மாநகர சபை அலுவலகத்தில் வைத்து மேயரிடம் சுமார் இரண்டு மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இந்த விசாரணையின் போது, திலீபனுக்குச் சிலை வைக்க வழங்கப்பட்ட அனுமதி, சிலை வடிவமைக்கப்பட்ட விதம், சிலை செய்யப்பட்ட இடங்கள் மற்றும் இதற்கான சபை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது பிரசன்னமாகியிருந்த மாநகர சபை உறுப்பினர்களின் விவரங்கள் வரை பல கோணங்களில் கேள்விகள் தொடுக்கப்பட்டு வாக்குமூலமாகப் பதிவு செய்யப்பட்டன.

யாழ். குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த நான்கு பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவினரே மாநகர சபை அலுவலகத்துக்கு நேரில் வருகை தந்து இந்த விசாரணைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles