நோபல் பரிசும் இல்லை; புலிட்​சர் பரிசும் இல்லை – கடும் அதிருப்தியில் ட்​ரம்ப்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஹெப்ரோனில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற சம்பவ இடத்திற்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட சில அரசியல்வாதிகள் சென்றுக்கொண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் தனது கட்சியின் அனைத்து தேர்தல் பிரசார நிகழ்வுகளையும் இரத்து செய்துவிட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

தாக்குதல் நடந்த பகுதியைச் சுற்றியுள்ள வீடுகள் இடிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அங்கு நிலைமை மிகவும் பதற்றமாகவே நீடிக்கிறது.

இதேவேளை, ஹெப்ரானில் வீடுகளில் புகுந்து சோதனை நடத்திய இஸ்ரேலியப் படைகள், மூன்று பாலஸ்தீனியர்களைக் கைது செய்தனர்.

ஹெப்ரானின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து சோதனைகளை நடத்தி வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக மூன்று பலஸ்தீனியர்களைக் கைது செய்துள்ளதாகவும் ‘வாஃபா’ (Wafa) செய்தி முகமை தெரிவித்துள்ளது.

ஹெப்ரானில் உள்ள ஒரு குடும்பத்திற்குச் சொந்தமான பல வீடுகளில் புகுந்த படையினர், அங்கிருந்தவர்களைத் தடுத்து நிறுத்தித் தாக்கியதுடன், அவர்களில் மூன்று பேரைக் கைது செய்துள்ளதாக அந்த பாலஸ்தீனிய செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், ஹெப்ரானைச் சுற்றி இஸ்ரேலியப் படைகள் இராணுவ முற்றுகையை ஏற்படுத்தியுள்ளன. நகரின் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளையும் இரும்புக் கதவுகளைக் கொண்டு அடைத்துள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles