இலங்கையை வந்தடைந்த அமெரிக்காவின் போர்க் கப்பல்

கொழும்பு துறைமுகத்திற்கு அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று வருகை தந்துள்ளது.
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான ‘யு.எஸ்.எஸ் கென்பெரா’ (USS Canberra – LCS 30) என்ற போர்க்கப்பல், இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இக்கப்பலுக்கு இலங்கை கடற்படை அளித்த சிறப்பான வரவேற்புக்கு இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.

‘இன்டிபென்டன்ஸ்’ (Independence-variant) வகையைச் சேர்ந்த இந்த போர்க்கப்பல், இந்த ஆண்டில் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தருவது இது இரண்டாவது முறையாகும்.

இதுகுறித்து இலங்கைகான அமெரிக்க தூதர் எரிக் மேயர் (Eric Meyer) கூறுகையில்:

“இந்த விஜயங்கள் மிகவும் சுமூகமாகவும் திறம்படவும் நடைபெறுவதற்கு இலங்கை கடற்படையினர் அளித்த தொழில்முறை ஒத்துழைப்பையும் ஆதரவையும் நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம்.

ஒவ்வொரு துறைமுக விஜயமும் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட நமது கடற்படை கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதோடு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதற்கான நமது கூட்டுப் பொறுப்பை உறுதிப்படுத்துகிறது – என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles