டொனால்ட் ட்ரம்பை விமர்சித்து கனேடிய பாடகர் வெளியிட்ட புதிய பாடல்

பிரபல கனடிய பாடகரும் பாடல் ஆசிரியருமான பிரையன் அடம்ஸ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவர் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய முடிவொன்றைக் கடுமையாக விமர்சித்து புதிய பாடலொன்றை வெளியிட்டுள்ளார்.

அடம்ஸின் புதிய அல்பமான ‘ஹவ்ஸ் இட் கோஇன்’ “How’s It Goin” ஒரு பகுதியாக “லேக் ஒன்ராறியோ” என்ற இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

கனடா மற்றும் அமெரிக்க எல்லைக்கு இடையே உள்ள புகழ்பெற்ற ‘ஒன்ராறியோ’ ஏரியின் பெயர், பழங்குடியின மக்களால் இடப்பட்ட பாரம்பரியப் பெயர் என்பதைக் கணக்கில் கொள்ளாமல், அதற்கு ‘லேக் அமெரிக்கா’ எனப் பெயர் மாற்றம் செய்ய ட்ரம்ப் பிறப்பித்த நிறைவேற்று உத்தரவை பாடகர் அடம்ஸ் தனது பாடலில் கடுமையாகச் சாடியுள்ளார்.

ஒன்ராறியோ மாகாண முதலமைச்சர் டக் ஃபோர்ட் என்பவருடன் ஏற்பட்ட காரசாரமான கருத்து மோதலைத் தொடர்ந்தே ட்ரம்ப் இந்த ஏரியின் பெயரை மாற்றும் முடிவை எடுத்தார். எனினும், கனடிய அதிகாரிகள் இந்த பெயர் மாற்றத்தை அங்கீகரிக்கவில்லை.

கனடாவின் பிரதமர் மார்க் கார்னி, ‘ஒன்ராறியோ’ என்ற பெயர் கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உருவாவதற்கு முன்னிருந்தே பயன்படுத்தப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது பாடலில், அரசியல் சர்ச்சைகளில் இருந்து கவனத்தைத் திருப்பவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பிரையன் அடம்ஸ் சாடியுள்ளார்.

“ஆனால் ஈரானில் விடயங்கள் அவருக்கு சாதகமாக நடக்கவில்லை… எனவே ஒரு குழந்தை விளையாட்டுக் சாமான்களை தூக்கி எறிவது போல, குறைந்தபட்ச அரசியலைச் செய்து ஒரு நாடகத்தை உருவாக்க அவர் நினைத்திருக்கலாம். ஆனால் இது மற்றொரு கவனச்சிதறலாகவே தோன்றுகிறது… எப்ஸ்டீன் கோப்புகள் வெளிவரும் நாளில், நாம் அனைவரும் மீண்டும் ‘லேக் ஒன்ராறியோ’ ஏரியில் குதிப்போம் என பிரையன் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் விவகாரங்கள் மற்றும் எப்ஸ்டீன் தொடர்பிலான விசாரணைகளில் இருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே ட்ரம்ப் இத்தகைய முடிவுகளை எடுக்கிறார் என அவர் தமது பாடலில் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

பிரபல பாடகர் பிரையன் ஆடம்ஸ் தற்போது அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் தொடர் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார். அடுத்த மாதம் அவர் தனது உலகளாவிய இசைப் பயணத்தை ஐரோப்பாவில் தொடரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles