இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இலங்கைத் தமிழ்ப் பிரதிநிதிகள் சந்திப்பு!

இலங்கைத் தமிழர்கள் மற்றும் காஷ்மீர் பண்டிட்டுகளின் அனுபவங்களை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா சென்றுள்ள இலங்கைத் தமிழ்ப் பிரதிநிதிகள், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஈ.சிறிநாத் ஆகியோர் அடங்கிய குழுவினரே அவரை சந்தித்துப் பேசியுள்ளனர்.

எனினும், இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் சந்திப்பின் முடிவுகள் தொடர்பான விரிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

“இனச் சுத்திகரிப்பின் பின்னணியில் நிலைமாற்று நீதி மற்றும் மனித உரிமைகள்: இலங்கைத் தமிழர்கள் மற்றும் காஷ்மீர் பண்டிட்டுகளின் கதைகள்” என்ற தலைப்பில் இந்தச் சர்வதேச மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்மாநாட்டில் பேச்சாளர்களாகப் பங்கேற்பதற்கான அழைப்பின் பேரிலேயே இலங்கைத் தமிழ்ப் பிரதிநிதிகள் இந்தியா சென்றுள்ளனர்.

இலங்கைத் தமிழர்களின் அனுபவங்கள், மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்கள் மற்றும் நிலைமாற்று நீதி குறித்த கருத்துகளைச் சர்வதேச அரங்கில் எடுத்துரைப்பதற்கான வாய்ப்பாக இம்மாநாடு அமைந்துள்ளது.

அத்துடன், இலங்கைத் தமிழர்கள் மற்றும் காஷ்மீர் பண்டிட்டுகள் எதிர்கொண்ட அனுபவங்களை ஒப்பீட்டு நோக்கில் ஆராய்வதற்கும், பாதிக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகள், நீதி மற்றும் அனுபவங்கள் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களை முன்னெடுப்பதற்கும் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles