பிரிட்டன் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு அயர்லாந்துடன் இணைவது தொடர்பில் ஆய்வு – அயர்லாந்து பிரதமர் தகவல்

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு அயர்லாந்துடன் ஒன்றிணைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யவும், அதற்கான தயாரிப்புகளை மேற்கொள்ளவும் ஒரு அரசு அமைப்பை உருவாக்கவுள்ளதாக அயர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.

அந்நாட்டின் பிரதமர் மைக்கேல் மார்ட்டின் Micheal Martin இன்று இதனை அறிவித்தார்.

இந்த புதிய அமைப்பு, வடக்கு அயர்லாந்து தொடர்ந்து பிரித்தானியாவின் ஒரு பகுதியாக நீடிப்பதா அல்லது ஐக்கிய அயர்லாந்தின் ஒரு அங்கமாகத் தன்னாட்சி உரிமையுடன் இருப்பதா போன்ற பல்வேறு சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யும் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியலமைப்பு ரீதியான எதிர்காலம் குறித்து நம்பகமான விவாதங்களை முன்னெடுக்க, “சார்பற்ற மற்றும் நடுநிலையான அறிவுத் தளம்” தேவைப்படுவதாகவும், அதற்கு ஒரு புதிய அணுகுமுறை அவசியம் என்றும் அவர் கூறினார்.

அதேநேரம் பிரெக்ஸிட்டுக்குப் பிறகு, எல்லை குறித்த வாக்கெடுப்பு (border poll) நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள விதம் எனக்குக் கவலையளிக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட தரப்பின் சார்பு நிலை கொண்ட, ஒருதலைப்பட்சமான வாதமாகவே உள்ளது” எனவும் விமர்சித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles