எதிரியின் அச்சுறுத்தல்களுக்கு உடனடி பதிலடி கொடுக்க தயாராக இருங்கள் – ஈரான் படைகளுக்கு மொஜ்தபா கமேனி உத்தரவு

புவியியல் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், எதிரியின் எந்தவோர் அச்சுறுத்தலுக்கும் உடனடியாகப் பதிலடி கொடுக்க முழுமையாகத் தயாராக இருக்குமாறு நாட்டின் ஆயுதப் படைகளின் மூத்த தளபதிகளுக்கு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமெனி உத்தரவிட்டுள்ளார்.

ஈரானிய அரசு செய்தி நிறுவனம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

நாட்டின் இராணுவத் தளபதிகள் மற்றும் மூத்த அதிகாரிகளுடனான ஒரு சிறப்பு கூட்டத்தின் போது உச்ச தலைவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கருத்து வெளியிட்டுள்ள கமெனி, நாட்டின் அதிகபட்ச பாதுகாப்பையும் தயார்நிலையையும் உறுதி செய்வதற்காக, எதிரிகளை உறுதியாகவும் இடைவிடாமலும் எதிர்கொள்வது அவசியம் என்று சுட்டிக்காட்டினார்.

எதிரிகள் மீண்டும் ஒரு இராணுவ அல்லது பயங்கரவாதத் தாக்குதலைத் தொடங்க முயற்சித்தால், மோதலின் முடிவிற்கான நேரமும் நிபந்தனைகளும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆயுதப் படைகளாலும் ஈரானிய மக்களாலும் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles