அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தலில் போப் லியோ தபால் மூலம் தனது வாக்கைச் செலுத்தினாா். இதன்மூலம், அமெரிக்க தோ்தலில் வாக்களித்த முதல் போப் என்ற வரலாற்றை அவா் பதிவு செய்துள்ளாா்.
அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தலில் போப் லியோ தபால் மூலம் தனது வாக்கைச் செலுத்தினாா். இதன்மூலம், அமெரிக்க தோ்தலில் வாக்களித்த முதல் போப் என்ற வரலாற்றை அவா் பதிவு செய்துள்ளாா்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிறந்தவரான போப் லியோ, வரும் செவ்வாய்க்கிழமை (நவ. 3) நடைபெறவுள்ள இடைக்காலத் தோ்தலுக்காக சிகாகோவில் தபால் மூலம் தனது வாக்கைச் செலுத்தினார் என வத்திக்கான் நிா்வாகம் வெள்ளிக்கிழமை அதிகாரபூா்வமாக உறுதிப்படுத்தியது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘ரோபா்ட் ப்ரீவோஸ்ட் என்ற இயற்பெயா் கொண்ட போப் லியோ, அமெரிக்க குடிமகன் எனும் அடிப்படையில் தனது வாக்குரிமையைப் பயன்படுத்தியுள்ளாா். முன்னதாக, பெரு நாட்டில் வசித்தபோதும் தகுதி பெற்றிருந்த அனைத்துத் தோ்தல்களிலும் அவா் தவறாமல் வாக்களித்துள்ளாா். ஜனநாயக நடைமுறைகளில் பங்கேற்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை மற்றும் கடமை என்பதில் போப் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளாா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
