அமெரிக்காவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இடைத்தேர்தல் இன்று (03.11) இடம்பெறவுள்ளது.
இந்த தேர்தலில் குடியரசு கட்சி காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டை தக்கவைத்துக் கொள்ளுமா? அல்லது காங்கிரஸ் கட்சி இரண்டு ஆண்டுகளாக விட்டுக் கொடுத்திருந்த அதிகாரத்தை மீளப் பெறுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப மீண்டும் வெள்ளை மாளிகைக்கு தெரிவு செய்யப்பட்டப்போது மக்கள் மத்தியில் இருந்த ஆதரவு தற்போது குறைந்திருப்பதாக கருத்து கணிப்புகள் காட்டுகின்றன.
அமெரிக்காவிற்கே முதலிடம் என்ற கொள்கையை வலியுறுத்தி ஆட்சி பீடம் ஏறிய ட்ரம்ப் தற்போது திசைமாறி ஈரான் போரை துவங்கி இருப்பது அமெரிக்கர்களை பெரிய அளவில் பாதித்துள்ளது.
குறிப்பாக பெட்ரோல் விலை உயர்வு மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
அத்தோடு அமெரிக்க கரூவூலத்துறை முடக்கம் மற்றும் அரச பணியாளர்களில் இராணுவத்தினரை தவிற ஏனையவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமை போன்ற விடயங்கள், அதனை ட்ரம்ப் கையாண்ட விதம் ஆகியவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
மேலும் உயர்ந்து வரும் விலைகள் ஒரு முக்கியப் பிரச்சினையாக இருப்பதோடு, தொடர்ந்து நிலவும் பணவீக்கத்திற்கு அவரது கொள்கைகளே – குறிப்பாக சுங்க வரிகள் மற்றும் ஈரான் போரே காரணம் என மக்கள் பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகவே இன்றைய தேர்தல் ட்ரம்பிற்கு மிகப் பெரிய சவாலாகவே காணப்படுகிறது.
இன்று நடைபெறும் தேர்தலில் டிரம்பின் பெயர் இடம்பெறவில்லை என்றாலும், வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குச் செல்லும்போது அவரது பொருளாதாரச் செயல்பாடுகளை மனதில் கொண்டுள்ளனர்.
சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்கர்கள் ஒரு அதிருப்தியான மனநிலையில் இருக்கிறார்கள் என்றே கூறப்படுகிறது.
