நியூயோர்க்கில் நடந்த ரயில் விபத்தில் இந்திய வம்சாவளி பெண் உட்பட இருவர் மரணம்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலாய்க்கா சித்ரே (24), அமெரிக்​கா​வின் நியூ ஜெர்​ஸி​யிலுள்ள டேடன் நகரில் வசித்து வந்​தார். இவரும், நேபாளத்​தைச் சேர்ந்த இவரது நண்​பர் நவம்கவுலும் இங்​குள்ள ரட்​கர்ஸ் பல்​கலைக்​கழகத்​தில் பட்​டப்​படிப்பு படித்​து​விட்டு அமெரிக்​கா​விலேயே தங்கி வேலை பார்த்து வந்​தனர்.

இந்​நிலை​யில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இரு​வரும் லோயர் மன்​ஹாட்​டன் சப்வே ரயில் நிலை​யத்​துக்கு சென்​றுள்​ளனர். ரயில்வே தண்​ட​வாளத்​தைக் கடக்க முயன்​ற​போது இரு​வரும் அந்த வழியே வந்த ரயில் மோதி அதே இடத்​திலேயே இறந்​தனர். பின்​னர் அவர்களது உடல்​கள் மீட்​கப்​பட்டு மருத்​து​வ​மனை​யில் வைக்கப்பட்டுள்ளது.

ரயில் தண்​ட​வாளத்​தில் நவம் கவுல் தவறி விழுந்​த​தார் எனவும் இதைப் பார்த்த மலாய்க்கா சித்ரே அவரைக் காப்​பாற்​றச் சென்று விபத்​தில் சிக்​கினார் எனவும் நியூ​யோர்க் போஸ்ட் பத்​திரிகை செய்தி வெளி​யிட்​டுள்​ளது.

ரட்​கர்ஸ் பல்​கலைக்கழகத்​தி​லுள்ள ரட்​கர்ஸ் பிசினஸ் பள்​ளி​யில் பட்​டப்​படிப்பை நவம் கவுல் முடித்​துள்​ளார். அதே​போல் மலாய்க்கா சித்​ரே, ரட்​கர்​ஸ்​-நியூ பிரன்​ஸ்விக் கலை, அறி​வியல் கல்​லூரி​யில் இளம் அறி​வியல் பட்​டப்​படிப்பை கடந்த 2024இல் முடித்​துள்​ளார்.

அகாடியா பார்​மசூடிக்​கல்ஸ் நிறு​வனத்​தில் சித்ரே ஆபரேஷன்ஸ் ஸ்பெஷலிஸ்​டாக​வும், நவம் கவுல் புளூம்​பெர்க் நிறு​வனத்​தில் டேட்டா அனலிஸ்​டாக​வும் வேலை பார்த்து வந்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles