முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச, எதிர்வரும் செப்ரெம்பர் 24 ஆம் திகதி பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று காலை (16) சிங்கப்பூருக்குப் புறப்பட்ட போது,விமான நிலையத்தில் அவருக்கு குறித்த அழைப்பாணை வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு, சிறிலிய சவியா கணக்கு தொடர்பான விசாரணைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச, இது தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே செப்ரெம்பர் 24ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
