சிவஞானம், சுமந்திரன் உட்பட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத் தாக்கல்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் இருந்து தம்மை நீக்கியமைக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தமிழ் அரசுக் கட்சியின் தற்போதைய பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (16) வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஆண்டு அரியநேந்திரனை, கட்சியின் உப விதிகளுக்கு முரணாக நீக்கியமைக்கு எதிராக தற்போதைய கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் பொதுச் செயலாளர் சத்தியலிங்கம், நிர்வாக செயலாளர் குணநாயகம் மற்றும் தமிழ் அரசுக் கட்சிக்கு எதிராக சிரேஷ்ட சட்டத்தரணி பிறேம்நாத் ஊடாக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கினை மாவட்ட நீதவான் இன்று எடுத்துக்கொண்ட போது எதிர்வரும் டிசெம்பர் 16ஆம் திகதிக்கு அடுத்த வழக்கினை நீதவான் திகதியிட்டுள்ளார்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles