ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணியில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் ஆகாஷ்

ஓமானில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை இளையோர் அணியில், யாழ்ப்பாணம் – பருத்தித்துறையைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஆகாஷ் இடம்பிடித்துள்ளார்.

இன்று 5ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை இந்தத் தொடர் நடைபெறுகின்றது.

இதற்காக இலங்கை இளையோர் அணி கடந்த திங்கட்கிழமையே ஓமானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.

வடமராட்சி – பருத்தித்துறையைச் சேர்ந்த ஹாட்லிக் கல்லூரியின் மாணவனான விக்னேஸ்வரன் ஆகாஷ், இலங்கை கிரிக்கெட் அரங்கில் மிகவேகமாக வளர்ந்துவரும் இளம் சுழற்பந்து வீச்சு நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வங்காளதேச அணிக்கு எதிரான தனது அறிமுக இளையோர் ஒருநாள் சர்வதேசப் போட்டியில், வெறும் 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியதுடன், தனது முதலாவது சர்வதேசப் போட்டியிலேயே ‘ஆட்டநாயகன்’ விருதையும் வென்றிருந்தார்.

அத்துடன், 2026ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியில் இடம்பிடித்துக் களமிறங்கிய அவர், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திப் பிரகாசித்திருந்தார்.

தனது துல்லியமான சுழற்பந்து வீச்சால் இலங்கை தேசிய அணியின் கவனத்தை ஈர்த்து, சர்வதேச அரங்கிலும் முத்திரை பதித்து வரும் விக்னேஸ்வரன் ஆகாஷ், இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் எதிர்கால முன்னணிச் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வரலாற்றில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles