400 பேரின் மரணங்களுக்கு காரணமான மத போதகருக்கு 200 கென்யாவில் ஆண்டுகள் சிறை

400 இற்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்குக் காரணமான கென்யாவைச் சேர்ந்த ‘உலக முடிவு’ வழிபாட்டுச் சபையின் தலைவர் போல மெக்கன்சி என்பவருக்கு, கொலை செய்தார் என்ற குற்றத்திற்காக வெள்ளிக்கிழமை 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கென்ய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கென்யாவின் கடலோர நகரான மொம்பாஸாவில் உள்ள உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

‘குட் நியூஸ் இன்டர்நேஷனல் சேர்ச்’ அமைப்பின் தலைவரான பாஸ்டர் போல் மெக்கன்சி, இயேசுவை நேரில் காண்பதற்காக பட்டினி கிடந்து உயிரை விடுமாறு தனது அமைப்பினை பின்பற்றுபவர்களை கட்டாயப்படுத்தியதன் மூலம் 190 குழந்தைகள் மற்றும் ஒரு பெரியவரைக் கொலை செய்தார் குற்றத்திற்காக தண்டனை பெற்றுள்ளார்.

நீதிபதி டயானா கவேட்சா தீர்ப்பளித்து பேசுகையில், “பின்பற்றுபவர்களை மனித நடமாட்டமில்லாத தனிமையான பகுதிக்கு அழைத்துச் சென்று, பட்டினி கிடந்து சாகுமாறு உத்தரவிட்டதன் முதன்மைக் குற்றவாளி மெக்கன்சிதான்” என்று தெரிவித்தார்.

இந்த வழக்கில் மெக்கன்சியுடன் சேர்த்து அவரது 28 பின்பற்றுபவர்களும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். பட்டினி உத்தரவை மீறாமல் கண்காணித்த பாதுகாவலர்கள் மற்றும் கூட்டுப் புதை குழிகளைத் தோண்ட உதவியவர்களும் இதில் அடங்குவர்.

2023ஆம் ஆண்டு, கிலிஃபி மாவட்டத்தில் உள்ள 800 ஏக்கர் சாக்காஹோலா வனப் பகுதியில் ஆழமற்ற புதைகுழிகளிலிருந்து 400இற்கும் மேற்பட்ட உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. 183 பேர் உணவின்றி பட்டினியாலும், 8 பேர் நேரடியாகக் கொல்லப்பட்டும் உயிரிழந்தனர்.

குற்றவாளிகள் யாரும் தங்கள் செயலுக்குப் வருந்தவில்லை என்றும், தாங்களும் பட்டினி கிடந்து சாகத் தயார் எனக் கூறினர் எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.

தீர்ப்பு வாசிக்கும்போது மெக்கன்சி சிரித்தபடியே இருந்தார். மெக்கன்சி மீது பயங்கரவாதம், கொலைக் குற்றம், குழந்தைகள் சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகம் உள்ளிட்ட மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தண்டனை பெற்ற அனைவரும் 14 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் தனது மனைவி மற்றும் 6 குழந்தைகளை இழந்த சுலைமான் ஜிரோ என்ற தந்தை, “எனது குடும்பத்தாரின் உடல்கள் கூட இன்னும் கிடைக்கவில்லை; இந்த தண்டனை போதாது, அவர்களுக்கு மரண தண்டனை அளித்திருக்க வேண்டும்” எனக் கண்ணீருடன் தெரிவித்தார்.

எனினும், மெக்கன்சியின் சொந்த மகனான டான் மெக்கன்சி, தனது தந்தையின் போதனைகளை எதிர்த்து தப்பித்ததார் என கூறி, “பாதிக்கப்பட்ட மக்களுக்கு இறுதியில் நீதி கிடைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles