அமரர் மயில்வாகனம் தங்கக்குட்டி (சேனாதி)

தோற்றம்05 MAR 1934,மறைவு01 JAN 2016

வயது 81

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Toronto, Canada

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் தங்கக்குட்டி அம்மையார் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 13-01-2023

கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் அம்மா
மண் விட்டு மறைந்து நீங்கள் விண் நோக்கிச் சென்று
ஏழு ஆண்டுகள் கடந்தாலும் கண்விட்டு
மறையாமல் என்றென்றும் இருப்பீர்களம்மா
இன்றும் உங்கள் நினைவுகளால்
எமக்கு வார்த்தை தடுமாறுகின்றதேயம்மா
அன்று கண்ட உங்களை எண்ணி
நெஞ்சம் உருமாறுகின்றதேயம்மா
காந்தமாய் எம்மை ஈத்த உங்களை
காலன் கவர்ந்து சென்றதேனோ
காலமெல்லாம் உங்கள் உறவு நினைத்துருக
கானா தூரம் எம்மை விட்டு சென்றதேனோ
பசியோடு வருவோர்க்கு சுவையாக உணவு பரிமாறி
அன்போடும் புன்னகையோடும் வழியனுப்பி வைத்தீர்களம்மா.
ஆனால் அன்று கண்விழி நீரோடு உங்களை
அனுப்பி வைத்ததை எண்ணுகின்றோம் அம்மா
நாங்கள் இன்று மங்காத உங்கள் நினைவால்
மயங்கியே நிற்கின்றோம் அம்மா

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்

மீளாத்துயரில் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
மற்றும் பூட்டப்பிள்ளைகள் 

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles