ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் மறைந்த தலைவர் அலி கமேனியின் இறுதி சடங்கு இடம்பெற்று வருகிறது.
இதில் லட்சக்கணக்கான மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது கூட்டத்தின் முன்பு பேசிய கலைஞர் ஒருவர் ட்ரம்பின் மரணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கவிஞரான முகமது ரசூலி, “அமெரிக்காவுக்கு மரணம்!” மற்றும் “இஸ்ரேலுக்கு மரணம்!” என்ற கோஷங்களை எழுப்பினார்.
ட்ரம்பைக் குறிப்பிட்டு பேசிய அவர், “உலகிலேயே மிகவும் கேவலமான மனிதன் ஏன் இன்னும் உயிருடன் இருக்கிறான்?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்விக்குக் கூட்டத்தினர் பெரும் ஆரவாரம் செய்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கருப்பு உடை அணிந்திருந்த பெருங்கூட்டத்தினர் “அமெரிக்காவுக்கு மரணம்” மற்றும் “இஸ்ரேலுக்கு மரணம்” என்று முழக்கமிட்டதோடு, பழிவாங்கு! பழிவாங்கு!” என்றும் கூச்சலிட்டனர்.
