குழந்தைப்பேற்றுக்காக கை மருந்தை உட்கொண்ட யுவதி மரணம்; பொலிஸார் விசாரணை

Colombo (News 1st) கை மருத்துவம் பார்க்கும் பெண் ஒருவரால் வழங்கப்பட்ட மருந்தை 03 நாட்கள் உட்கொண்ட பின்னர் யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசார​ணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிகிரிய – தியகெப்பில்ல பகுதியை சேர்ந்த 23 வயதான யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தைப்பேறு இன்மையால், கிரிதலே பகுதியில் கை மருத்துவமும், வழிபாட்டு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் இடத்திற்கு சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்காக குறித்த யுவதி தனது தாயுடன் சென்றுள்ளார்.

இதன்போது, அங்கிருந்த பெண்ணால் யுவதிக்கு 03 நாட்களுக்கான மருந்து வழங்கப்பட்டுள்ளதுடன், அதனை உட்கொண்ட யுவதி சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles