முதியோர், நோயாளருக்கான ஜூலை மாத கொடுப்பனவு நாளை மறுதினம்(25) முதல் வழங்கப்படும் – ஷெஹான் சேமசிங்க

 

Colombo (News 1st) முதியோர், ஊனமுற்ற மற்றும் நீரிழிவு நோயாளர்களுக்கான ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகளை செலுத்துவதற்காக 2,684 மில்லியன் ரூபா நிதி, திறைசேரியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதி மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

முதியோருக்கான கொடுப்பனவுகளை தபால் அலுவலகங்களின் ஊடாகவும் ஊனமுற்ற மற்றும் நீரிழிவு நோயாளர்களுக்கான கொடுப்பனவுகளை பிரதேச செயலகங்களின் ஊடாகவும் நாளை மறுதினம்(25) முதல் பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles