மலேசியாவின் ஜோகூர், கோத்தா திங்கி – குளுவாங் சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த விபத்தில் 47 வயது நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அதிகாலை 2.45 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், புரோட்டோன் சாகா காரை ஓட்டிச் சென்றபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்ததால் கார் சாலையின் இடதுபுறமாகச் சரிந்து, உருண்டு குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகக் கோத்தா திங்கி மாவட்ட பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
காரினுள்ளிருந்த 46 வயது பெண் பயணி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து பொலிஸார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
