அமரர் புவனேஸ்வரி கந்தசாமி (பாக்கியம்)

பிறப்பு30 OCT 1940, இறப்பு04 DEC 2022

வயது 82

அனலைதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Brampton, Canada

யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 23-11-2023

அம்மா!
நீங்கள் மண்ணில்
மறைந்து ஓராண்டு ஆயினும்
எங்கள் நெஞ்சில் நிலையாய்
என்றும் நிறைந்துள்ளீர்கள்
ஆயிரம் உறவுகள்
அரவணைத்தாலும் அம்மா
உங்கள் அன்புக்கு ஈடாகுமா?

கனவுகளை நாங்கள் சுமந்து
கண்களில் நீர் சொரிந்து கலங்குகிறோம்
உங்கள் நினைவால் இந்த நாள்
எம்மால் மறக்கமுடியாத நாள்!

நாங்கள் மறக்க விரும்பாத துயர நாள்!
மனம் ஏங்கி தவிக்கின்றது உங்களை காண
உங்கள் குரல் கேட்க காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது எத்தனை ஆண்டுகள்
கடந்தாலும் எமது மனம் உங்களை தேடிக்கொண்டே இருக்கும்

ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்
அன்னையே உன்னை போன்று அன்பு செய்ய
யாரும் இல்லை இவ் உலகில்
அரவணைத்த கைகள் இன்றில்லை
அம்மா அம்மா என்றழைக்க நீங்கள் இல்லை

பல நினைவுகளோடு பயணிக்கின்றோம்
எஞ்சுபவை கண்ணீர்த் துளிகள் மட்டுமே
ஈராரு மாதங்கள் கடந்ததோ அம்மா
உங்கள் ஆத்மசாந்திக்கு பிரார்த்திக்கிறோம்

கண்ணீருடன் என்றும் உங்கள் பிரிவால் வாடும்
கணவர், பிள்ளைகள், சகோதரர்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles