பாரவூர்தியின் டயரை மாற்றிக் கொண்டிருந்த மெக்கானிக் விபத்தில் பலி

மலேசியாவின் தெமர்லோ அருகே கிழக்கு கடற்கரை அதிவேக நெடுஞ்சாலையின் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

பாரவூர்தி ஒன்றின் இடது பக்க பின் டயர் காற்றுக்போனதால் 35 வயதுடைய ஓட்டுநர் தனது பாரவூர்தியை நெடுஞ்சாலையின் அவசர வழியில் (Emergency Lane) நிறுத்தியிருந்தார்.

காற்றுப்போன டயரை மாற்றுவதற்காக 48 வயதான மெக்கானிக் ஒருவர் வரவழைக்கப்பட்டார். அவர் பாரவூர்தியின் வலது பக்கத்தில் அமர்ந்து டயர்களைப் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது, அதே திசையில் வந்த 3 டன் கொண்ட மற்றுமொரு பாரவூர்தி நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தி மீது மோதியது.

இந்த மோதலில் அந்த மெக்கானிக் மீது பாரவூர்தி மோதியதில், அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய 36 வயது பாரவூர்தி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் அல்லது மது அருந்தியதற்கான ஆதாரங்கள் இல்லை எனத் தெரியவந்தது.

இந்த வழக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987இன் பிரிவு 41(1)இன் கீழ் (அலட்சியமாக வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்தல்) விசாரிக்கப்படுகிறது.

இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, RM50,000 வரை அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

விபத்தை ஏற்படுத்திய பாரவூர்தி வீதியோரம் இருந்த வடிகாலில் விழுந்து நின்றது. உயிரிழந்த மெக்கானிக்கின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சுல்தான் ஹாஜி அஹ்மத் ஷா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இரு பாரவூர்தி ஓட்டுநர்களும் காயமின்றி உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles