தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர் போட்டியின்றி சபாநாயகராக தெரிவு

 

தமிழ்நாடு சட்டப் பேரவையின் சபாநாயகராக ஜே. சி. டி. பிரபாகர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார். துணை சபாநாயகராக ரவிசங்கர் தெரிவானார்.

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக விஜய் கடந்த மே 10ஆம் திகதி பதவி ஏற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

அவர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். மேலும்இ புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப் பிர மாணம் செய்து வைப்பதற்காக சட்டப்பேரவை தற்காலிக தலைவராக கருப்பையா நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் நிரந்தர பேரவைத் தலைவர் பதவிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஜே. சி. டி. பிரபாகர் பேரவையின் செயலாளர் கி. சீனிவாசனிடம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அப்போது முதல்வர் விஜய், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த், அருண்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதேபோல், சட்டப்பேரவை துணைத்தலைவர் பதவிக்கு துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் எதிர்கட்சிகள் சார்பில் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய முன்வராததால் பேரவைத் தலைவராக ஜே. சி. டி. பிரபாகர்இ துணைத் தலைவராக ரவிசங்கர் ஆகியோர் இன்று – மே 12ஆம் திகதி போட்டியின்றி தெரிவாகினர்.

இதன்படி சட்டப்பேரவைத் தலைவராக ஜே. சி. டி. பிரபாகர் தெரிவானதும் அவரை அமைச்சர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து பேரவைத் தலைவருக்கான இருக்கையில் அமர வைத்தனர்.

பின்னர் சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகர்இ துணை சபாநாயகராக ரவிசங்கர் நியமிக்கப்படுகிறார் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவை உறுப்பினர்கள் சபநாயகர், துணை சபாநாயகருக்கான வாழ்த்துரைகளை வழங்கினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles