நெடுந்தீவு கடற்பரப்பில் 14 தமிழக மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் 3 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பினுள் நேற்றைய தினம் (06) கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், அத்துமீறி நுழைத்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர்களை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர்.

விசாரணைகளின் பின்னர், கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் ஊடாக அவர்களை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles