யாழில். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நிகழ்வு

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் யாழ். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து நடாத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நிகழ்வு நேற்றைய தினம் (06) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனும், சிறப்பு விருந்தினர்களாக சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் செல்வி அகல்யா செகராசா, தினகரன் நாளிதழின் பிரதம ஆசிரியர் திரு.செந்தில் வேலவர், கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர் திரு.சிவகெங்காதரன், சங்கவி பிலிம்ஸ் & சங்கவி தியேட்டர் பணிப்பாளர் திரு.Dr.துரைராசா சுரேஸ், வட மாகாண கைத்தொழில் அபிவிருத்தி சங்கத் தலைவர் திரு. தம்பிராசா சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

இதில், மாற்றுத் திறனாளிகளின் நடனம், கவிதை, பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும், சுயதொழில் முயற்சியாளர்களின் கௌரவிப்புகளும் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles