ஹட்டன் ஜூம்மா பள்ளிவாசலின் காவலாளி சடலமாக மீட்பு

Colombo (News 1st) ஹட்டன் ஜூம்மா பள்ளிவாசலின் காவலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காவலாளி தங்கும் அறையில் இருந்து இன்று (09) காலை அவரது சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காவலாளியின் உடலில் காயங்கள் காணப்படுவதாகவும், சந்தேகநபர் பள்ளிவாசலுக்குள் நுழையும் காட்சிகள் CCTV-இல் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஹட்டன் – ஹிஜிராபுர பகுதியை சேர்ந்த 04 பிள்ளைகளின் தந்தையான 67 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles