யாழ். பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவரிடம் விசாரணை!

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் தர்ஷனிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவரும் ஊடகவியலாளருமான இராசரத்தினம் தர்ஷனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் யாழ். மாவட்டத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து சுமார் 3 மணத்தியாலத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 2022 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை யாழ். பல்கலைக்கழகத்தில் முன்னெடுத்தபொழுது தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல் இசைக்கப்பட்டமை மற்றும் மாணவர் ஒன்றிய செயற்பாடுகள் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles