தபால் ஊழியர்களின் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும்(11) தொடர்கின்றது

Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும்(11) தொடர்கின்றது.

தபால் திணைக்களத்திற்கு சொந்தமான கட்டடங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

27000 தபால் ஊழியர்கள் இந்த அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதும் இந்த வேலைநிறுத்தத்தின் மற்றுமொரு நோக்கமாகும் என அவர் கூறினார்.

நாடளாவிய ரீதியில் நேற்று(10) மாலை 04 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நாளை(12) நள்ளிரவு வரை தொடரவுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles