இணையத்தில் வைரலாகும் கவினின் “ஸ்டார்“ படத்தின் முதல் பாடல்

நடிகர் கவின் நாயகனாக நடித்து வரும் “ஸ்டார்“ திரைப்படத்தின் முதல் பாடல் இன்று (12) வெளியாகியுள்ளது.

சின்னத்திரை நடிகரான கவின், டாடா படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது, நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இதற்கிடையே, பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இலனுடன் ‘ஸ்டார்’ என்ற படத்தில் கவின் இணைந்துள்ளார். இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஸ்டார் திரைப்படம் காதலர் தினத்தையொட்டி வரும் பெப்ரவரி 9 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், ஸ்டார் திரைப்படத்தின் முதல் பாடலான ”உனக்கென்ன நீ ஹீரோ” என்ற பாடல் வெளியாகி, இணையத்தில் வைரலாகியுள்ளது. இப்பாடலை மதன்கார்கி எழுதியுள்ளார். யுவன்சங்கர் ராஜா பாடியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles