Tuesday, September 24, 2024
Homeபெறுமதி சேர் வரி (VAT) தொடர்பாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள விசேட தகவல்!

பெறுமதி சேர் வரி (VAT) தொடர்பாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள விசேட தகவல்!

பெறுமதி சேர் வரி உள்வாங்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள ஏனைய வரிகளை நீக்கி, வெட் வரி திருத்தத்தின் தாக்கத்தை குறைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்தார்.

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டம் மற்றும் அதன் தாக்கம் என்ற தலைப்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் விசேட ஊடக சந்திப்பொன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா, பொருளாதாரம் தொடர்பான விசேட அறிவுள்ள ஒரு சிலர் கூட ஜனவரி முதலாம் திகதி முதல் VAT அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் ஒரு குடும்பத்தின் மாதாந்தச் செலவு மேலும் 40,000 ரூபாவினால் அதிகரிக்கும் என்ற கருத்தை கூட சமூகமயப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.

கல்விச் சேவைகள், மின்சாரம், சுகாதாரம், மருத்துவம், பயணிகள் போக்குவரத்து, அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட ஏறக்குறைய 90 வகையான பொருட்களுக்கு VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சிறப்பு வர்த்தக வரி விதிக்கப்பட்டுள்ள 65 வகையான பொருட்களுக்கு VAT விதிக்கப்படாது என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட வரித் திருத்தங்களால் 8 விதமாக VAT குறைக்கப்பட்டது. இதனால் அரச வருமானம் பெருமளவு குறைந்துள்ளது.

பின்னர் அது 15வீதமாக ஆக உயர்த்தப்பட்டது. 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் VAT விகிதத்தை 15 வீதத்திலிருந்து 18 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இனிமேலும் எம்மால் சலுகைகளை அடிப்படையாக கொண்டு முன்னோக்கிச் செல்வது கடினமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரச வருமானத்தை அதிகரிக்கும் அத்தியாவசியமான காரணத்தினால் இந்த வரித் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் இதற்குத் தேவையான பல்வேறு வரித் திருத்தங்கள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

ஏராளமான வரி விலக்குகளை நீக்க புதிய திருத்தத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றும் அரசாங்கம் இழந்த பெரும் வருமானத்தை மீட்பதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments