Monday, February 9, 2026
Homeபட்டிப்பொங்கல் தினத்தில் பண்ணையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

பட்டிப்பொங்கல் தினத்தில் பண்ணையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Colombo (News 1st) ‘பட்டிப்பொங்கல் பண்ணையாளர்களுக்கு ஒரு கரிநாள்’ எனும் தொனிப்பொருளில் மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர். 

மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் அறவழி போராட்டத்தின் 124 ஆவது நாள் பூர்த்தியையும்
பட்டிப்பொங்கலையும் முன்னிட்டு நீதி கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் இந்த கவனயீர்ப்பில் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு – காந்தி பூங்கா முன்பாக ஆரம்பமான கவனயீர்ப்புப் பேரணி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது, மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடலும் இடம்பெற்றது. 

இதனிடையே, மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினையை கண்டித்து திருகோணமலை –  கன்னியாவிலும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று இடம்பெற்றது. 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular