குமுதினி படகு படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நெடுந்தீவில் அமைந்துள்ள நினைவிடத்தில் இன்று – வெள்ளிக்கிழமை உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது.
கடந்த 1985ஆம் ஆண்டு மே 15ஆம் திகதி காலை பல்வேறு தேவைகளுக்காக நெடுந்தீவு மாவிலித்துறையில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி குழுதினி படகில் பயணித்த பச்சிளம் குழந்தைகள் உட்பட 36 பேர் கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
காலை 9.15 மணிக்கு நினைவேந்தல் நினைவேந்தல் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் வேலன் சுவாமிகள், நெடுந்தீவு பங்குத்தந்தை, பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா உள்ளட்ட அரசியல் பிரதிநிதிகள் மதத் தலைவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, காலை 8.30 மணிக்கு நெடுந்தீவு மாவிலித்துறை வீரபத்திரப் பிள்ளையார் ஆலயம், நெடுந்தீவு மாவிலித்துறை சவேரியார் ஆலயம், நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபை ஆலயம் மற்றும் நெடுந்தீவு தேவசபை ஆலயம் என்பவற்றில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் ஆத்ம சாந்திக்கான வழிபாடுகளும் நடைபெற்றன.
தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாளான இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.

