மற்றொரு நிதிப் பரிவர்த்தனையிலும் தவறு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறீ லங்கன் எயார்லைன்ஸ் சேவை வழங்குநருக்கு வழங்க வேண்டிய 74 ஆயிரம் திர்ஹம்கள் – நம் நாட்டு மதிப்பில் சுமார் 65 இலட்சம் ரூபாய் நிதி வேறொருவருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
தவறான நிதிப் பரிமாற்றம் நிகழ்ந்தமையை சிவில் விமான போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அருணா கருணதிலக உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஜனவரியில் 25 இலட்சம் டொலர் நிதிப் பரிமாற்றம் தவறுதலாக வேறொருவருக்கு அனுப்பப்பட்டது. இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.
