முன்னாள் இராஜாங்க அமைச்சர் மறைந்த சனத் நிஷாந்தவின் சகோதரரும் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஜகத் சமந்தவுக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரை அச்சுறுத்தியமை, அரச கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் சட்டவிரோதமான முறையில் ஒன்று கூடியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்தே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
