கொழும்பு பகுதியில் துப்பாக்கிசூட்டில் சிறுமி படுகாயம்..!

கொழும்பு மீகொட பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமி ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மீகொட பொருளாதார மத்திய நிலையத்திற்குள் இன்று (12) காலை அத்துமீறி ஆயுதங்களுடன் நுழைந்த இருவர் கடை ஒன்றை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அப்போது கடையில் காசாளராக இருந்த சிறுமியின் வயிற்றுப் பகுதியை நோக்கி 3 முறை சுட்டதில், சிறுமி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடையின் அலமாரியில் இருந்த பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள், கீழே இருந்த பெட்டகத்தின் பணத்தை பெற சாவியை கேட்டு குறித்த சிறுமியை சுட்டுள்ளனர்.

அதன் பின் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

திருடப்பட்ட பணம் குறித்த விபரம் இதுவரை வெளிவராத நிலையில், காயமடைந்த சிறுமி தற்போது ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles