இங்கிலாந்து நாட்டின் தெற்கே பிரிஸ்டல் நகரில் ஸ்டெர்ன்கோர்ட் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று (03) மணியளவில் திடீரென்று ஏற்பட்ட வெடிவிபத்து இருவர் உயிரிழந்துள்ளதாக சாமர்செட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வெடிவிபத்திற்கான காரணம் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. சம்பவம் பற்றி அவர்களுடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை நடந்து வருகின்றது.
அந்த பகுதியை பொலிஸார், தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பொதுமக்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
