சில நாடுகளுடன் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கைகளில் கைச்சாத்திட திட்டம்

Colombo (News 1st) சில நாடுகளுடன் இணைந்து கைதிகள் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நடவடிக்கையை விரைவுபடுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த உடன்படிக்கையின் ஊடாக வௌிநாடுகளில் கைது செய்யப்படும், நாட்டில் தேடப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான இயலுமை ஏற்படுமென பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார்.

தற்போது சில நாடுகளுடன் இணைந்து அத்தகைய உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் மேலும் சில நாடுகளுடன் இணைந்து விரைவில் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கைகளில் கைச்சாத்திட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வௌிவிவகார அமைச்சினால் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார்.

நாட்டில் பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய பிரபல வர்த்தகர்கள் 42 பேர் தற்போது வௌிநாடுகளில் தலைமறைவாகியுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் துபாயில் வசித்து வருகின்றனர்.

ஏனையோர் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தலைமறைவாகியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இவர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் ஊடாக சிவப்பு அறிவித்தல் பிற்பிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக புலனாய்வுத் தகவல்கள் பெறப்படுவதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles