இளைஞர்களை தாக்கும் புற்றுநோய்: ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இங்கிலாந்தில் இளைஞர்களிடையே புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதற்கு ‘உடல் பருமன்’ மிக முக்கிய காரணம் என்று புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.

லண்டன் இம்பீரியல் கல்லூரி – புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய சமீபத்திய ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ன.

கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 20 முதல் 49 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே சுமார் 11 வகையான புற்றுநோய் பாதிப்புகள் கணிசமாக உயர்ந்துள்ளன.

புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் பெரிய அளவில் மாறாத நிலையிலும் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் ‘உடல் பருமன்’ மட்டுமே இந்த புற்றுநோய் உயர்வுக்குக் காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக குடல், சிறுநீரகம், கணையம் மற்றும் கருப்பை புற்றுநோய்கள் உடல் பருமனுடன் நேரடித் தொடர்புடையவை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சரியான உடல் எடையைப் பராமரிப்பதன் மூலம் 20 சதவீத குடல் புற்றுநோயையும் 35 சதவீத கருப்பை புற்றுநோயையும் தவிர்க்க முடியும் என இந்த ஆய்வு உறுதிபடத் தெரிவிக்கிறது.

இருப்பினும், உடல் பருமன் மட்டுமே இந்த உயர்வுக்கு முழுமையான காரணம் அல்ல என்றும் நவீன வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் குறித்தும் கூடுதல் ஆராய்ச்சிகள் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles