வடமேல் மாகாணத்திலும் சில மாவட்டங்களிலும் அதிக வெப்பம் நிலவும்: வளிமண்டலவியல் திணைக்களம்

Colombo (News 1st) வடமேல் மாகாணத்திலும் சில மாவட்டங்களிலும் அதிக வெப்பம் நிலவும் என எச்சரிக்கை அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பம் அவதான மட்டத்தில் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலைமையில் இருந்து பொதுமக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்வதற்காக திணைக்களம் அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது.

போதுமான தண்ணீர் அருந்துதல், அதிக சோர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடாதிருத்தல், வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிதல், நிழலான இடங்களில் தங்கியிருத்தல் என்பனவற்றை பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles