தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச தகவல்கள் தெரிவிகின்றன.
மர்ம நபர்கள் நடத்திய இந்த தாக்குதலில் 9 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 10 இற்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய குழுவினர் தாக்குதலை நடத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் சந்தேக நபர்களை பிடிக்க தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
