காலையில் புத்தம் புதிய புரோட்டான் எக்ஸ்50 ரக காரை எடுத்து மகிழ்ச்சியாய் பயணித்த குடும்பம், பிற்பகல் நடந்த சாலை விபத்தில் பலியான சம்பவம் மலேசியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட அந்தப் புதிய வாகனத்தில் சென்ற ஆறு குடும்ப உறுப்பினர்கள் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேற்று பிற்பகல் சுமார் 3.45 மணியளவில் கார் ஒரு லொறியுடன் மோதியதில், 6 மாதக் கைக்குழந்தை, 3 வயது சிறுமி, 7 வயதுசிறுவன் உட்பட அறுவர் உயிரிழந்தனர்.
நேரான சாலையில் பயணித்துக் கொண்டிருந்த புரோட்டான் எக்ஸ் 50 வாகனம், எதிர்ப்புறப் பாதைக்குள் நுழைந்து, மண் ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதை, வாகனத்தின் டாஷ்போர்ட் கமரா பதிவுசெய்தது. இந்த காட்சிகள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டன!
