சிங்கப்பூரில் அதிகச் சக்திவாய்ந்த புதிய கணனி(Super computer) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ASPIRE 2-B என்று அது அழைக்கப்படுகிறது.
மோசமான வானிலை குறித்து எச்சரிப்பது முதல் புற்றுநோயாளிகளுக்குக் குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சைகளைப் பரிந்துரைப்பது வரை பலவற்றை அதனால் செய்ய முடியும்.
அறிவியல் ஆராய்ச்சிகளை விரைவுபடுத்த ASPIRE 2-B கணினி உதவுமென நம்பப்படுகிறது.
பாவனைப் பயிற்சி, தரவுப் பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு முதலியவற்றில்
1,500இற்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு இந்தக் கணினி கைகொடுக்கும்.
அதிகச் சக்திவாய்ந்த கணினிகளுக்கான தேசிய நிலையத்தில் ASPIRE 2-B கணினி அறிமுகமானது. நிகழ்ச்சியில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் தியோ கலந்துகொண்டார்.
வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் ஆய்வுப் பணிகளை இனி இந்தக் கணினியைக் கொண்டு உள்ளூரிலேயே செய்யமுடியும் என்றார் அவர்.
