TIN இலக்கம் தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

Colombo (News 1st) வரிப் பதிவின் போது TIN இலக்கத்தை வழங்குவது தொடர்பான யோசனையை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

இதற்கான யோசனை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

6 நிறுவனங்களிடமிருந்து இது தொடர்பான பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளதாகவும் 4 நிறுவனங்களின் பரிந்துரைகள் கிடைத்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக எதிர்காலத்தில் தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் போது, அதே இலக்கத்தை  TIN  இலக்கமாக பயன்படுத்தும் வகையில் யோசனை முன்வைத்து அமைச்சரவைப்பத்திரம் தயாரிக்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles